இஸ்ரேலின் யோசனை ஜனநாயகத்திற்கு முரணானது

386 0

28-israel-flagஇஸ்ரேல் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த யோசனையானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைப்படி, விரோத மனப்பான்மை கருத்துக்களை கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களால் வெளியேற்றமுடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டால், பாலஸ்தீன பிரதிநிதிகளே பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நெட்டன்யாகுவின் அரசாங்கத்தை பொறுத்தவரையில் பாலஸ்தீனர்கள் இல்லாத நாடாளுமன்றம் ஒன்றையே அது உருவாக்கும் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
எனவே இது ஜனநாயக விரோத செயலாகவே இருக்கும் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.