இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவின் மரண அச்சுறுத்தல் காரணமாக தனது கடமைகளைத் தொடர முடியாது என ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்ததையடுத்து, சீநோர் நிறுவனத்தின் (C-Nor Foundation) தலைவர் கலாநிதி துலான் ஹெட்டியாராச்சி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தன்னை அச்சுறுத்தி இலஞ்சம் கேட்டு வருவதாகவும் சில சந்தர்ப்பங்களில் வழங்காதபோது கொலைமிரட்டல் விடுப்பதாகவும் கலாநிதி துலான் ஹெட்டியாராச்சி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் சீ நோர் அமைப்பின் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக ஹெட்டியாராச்சி பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் அந்த நிறுவனத்துக்கு 20 புதிய ஊழியர்களை பியல் நிஷாந்த நியமித்ததாகவும் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

