யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் மென்கடே நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024

386 0

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில் 16.03.24 சனி, 17.03.24 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது.

யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிய வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரான்சு, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும்(அனுபவம்) வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.

அதிக எண்ணிக்கைகளிலான நடனக்கலைஞர்கள் வாகைமயில் போட்டியில் கலந்து கொண்டார்கள். 16.03.24 சனிக்கிழமையன்று மண்டபம் நிறைந்த மக்களுடன் போட்டிகள் தொடங்கியது. முதலில் மண்மீட்புப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு டோட்முன்ட் நகரச் செயற்பாட்டாளர் திருமதி. கிருபாரதி சிவராம் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து நடுவர்கள், நடன ஆசிரியர்கள், தமிழ்ப் பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர்களால் மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுப் போட்டிகள் தொடங்கியது. சனிக்கிழமைக்குரிய போட்டிகள் நிறைவு பெற்றதும் முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட்டது.

17.03.24 ஞயிறு அன்று 9:00 மணிக்கு மண்டபம் நிறைந்த மக்களுடன் போட்டிகள் தொடங்கியது. முதலில் மண்மீட்புப் போரில்; தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுச்சுடரை 1990ஆம் ஆண்டு மண்டைதீவுப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சந்திரகாந்தன் கேதீஸ் அவர்களதும் 2000;ஆம் ஆண்டு எல்லைப்படையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சேகர் பாலகிருஸ்ணன் அவர்களதும் சகோதரி திருமதி. தயாளினி ஜெயசங்கர் அவர்கள் ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து வாகைமயில் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப்பொறுப்பாளர். திரு ஜெயசங்கர் சுப்ரமணியம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாநிலப் பொறுப்பாளர், செயற்பாட்டாளர்கள். தமிழ்க் கல்விக் கழகத் துணைப் பொறுப்பாளர், தேர்வுப் பொறுப்பாளர் திரு சேரன் யோகேந்திரன், தமிழ்க் கல்விக் கழக மாநிலச் செயற்பாட்டாளர்கள், தமிழ்க் கல்விக் கழக முன்னனிச் செயற்பாட்டாளர்கள், இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் செல்வன் சயன் கேதீஸ்வரன், வாகைமயில் போட்டி நடுவர்கள் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் அனைவரையும் தழிழ்ப் பெண்கள் அமைப்பினர் வணக்கத்துடன் வரவேற்று, ‘தோகை விரித்தாடுவோம். தாளமெடுத்தாடுவோம் வாகைமயில் போட்டியிலே நாங்கள் வாகை சூடுவோம் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் போட்டி வாகைமயில் போட்டி’ என்னும் பாடலோடு அனைவரையும் வாகைமயில் அரங்குக்கு அழைத்து வந்தது மெய்சிலிர்க்க வைத்தது.

சிறப்பு விருந்தினர்கள் அரங்குக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப்பொறுப்பாளர். திரு ஜெயசங்கர் சுப்ரமணியம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தாயகநலன் பொறுப்பாளர் ராஜரட்ணம் ராஜன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு சின்னையா நாகேஸ்வரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் ஐவுவுயு தேர்வுப்பொறுப்பாளர், திரு சுந்தரலிங்கம் கோபிநாத், இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் செல்வன் சயன் கேதீஸ்வரன்;; தமிழ்க் கல்விக் கழகத் துணைப் பொறுப்பாளர் , தேர்வுப் பொறுப்பாளர் திரு சேரன் யோகேந்திரன், தமிழ்க் கல்விக் கழக முன்னனிச் செயற்பாட்டாளர்கள், தமிழ்க் கல்விக் கழக மத்திய மாநிலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான தமிழ்வாரிதி தமிழ்மாணி திரு செல்லர் தெய்வோந்திரம் , தமிழ்க் கல்விக் கழக மத்திய மாநிலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திருமதி மோகனா புண்ணியமூர்த்தி, தமிழ்க் கல்விக் கழக வடமாநிலச் செயற்பாட்டாளர் தமிழ்வாரிதி தமிழ்மாணி திருமதி சுபத்திரா யோகேந்திரன், தமிழ்க் கல்விக் கழக மத்திய மாநிலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திருமதி பிரேமினி றஞ்சித், தமிழ்ப் பெண்கள் அமைப்பு துணைப் பெறுப்பாளர் செல்வி தமிழினி பத்மநாதன் ,தமிழ்ப் பெண்கள் அமைப்பு லண்டவ் நகரச் செயற்பாட்டாளர் திருமதி இந்திராதேவி விமல், தமிழ்ப் பெண்கள் அமைப்பு மூத்த உறுப்பினர் திருமதி சாந்தா கிருஸ்ணா ஐயர் அவர்களினால் மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டுப் போட்டிகளுக்குள் நுழைந்தோம்.

14:30 மணியளவில் அனைத்துப் போட்டிகளும் நிறைவுபெற்று மண்டபம் நிறைந்த மக்களின் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் மதிப்பளிப்புகளும் வாகை விருதுகளும் வழங்கப்பட்டன.

மதிப்பளிப்புகளும் விருதுகளும் பெற்றுக்கொண்டோர் விபரம்

தனிநடனம் வாகைமயில் விருது
ஆரம்பப்பிரிவு
செல்வி சனயா ரஞ்சன் செல்வி ரோசிகா ரவிக்குமார் அவர்களின் மாணவி

கீழ்ப்பிரிவு
செல்வி அச்சுதா கதிர்காமநாதன் திருமதி அபிரா தயாபரன் அவர்களின் மாணவி

மத்திய பிரிவு
செல்வி ஆராதனா கிருஷ;ணமேனன் செல்வன் நிமலன் சத்தியகுமார் அவர்களின் மாணவி

மேற்பிரிவு
செல்வி சாந்தனி தப்பா சனேற்றி திருமதி அமலா அந்தோணி சுரேஸ்குமார் அவர்களின் மாணவி

அதிமேற்பிரிவு
செல்வி மதுசா ரஞ்சித் திருமதி ரெஜனி சத்தியகுமார் அவர்களின் மாணவி

21 வயதுக்கு மேற்பட்டோர்
செல்வி அபிரா ரவீந்திரநாதன் திருமதி யனுசா பிரதீப் அவர்களின் மாணவி

குழுநடனம் வாகைமயில் விருது

கீழ்ப்பிரிவு
செல்வி அச்சுதா கதிர்காமநாதன் திருமதி ரெஜனி சத்தியகுமார் அவர்களின் மாணவி

மேற்பிரிவு
செல்வி கியரா பெர்னாண்டோ திருமதி லாவண்யா நிரோசன் அவர்களின் மாணவி

அதிமேற்பிரிவு
செல்வி மதுசா ரஞ்சித் செல்வன் நிமலன் சத்தியகுமார் அவர்களின் மாணவி

21 வயதுக்கு மேற்பட்டோர்
செல்வி அபிரா ரவீந்திரநாதன் திருமதி யனுசா பிரதீப் அவர்களின் மாணவி

தனிநடனம்

ஆரம்பப்பிரிவு
இண்டாம் இடம்
செல்வி அநீஷh குருசாமி
செல்வி அஷ;விகா அஜந்தன்

மூன்றாம் இடம்
செல்வி ஸ்ரீ வத்ஷனி அருள்ராஜ் சர்மா
செல்வி ஆக்ஷனா கிருபாகரன்

கீழ்ப்பிரிவு
இண்டாம் இடம்
செல்வி கெற்றியா பெர்னாண்டோ
செல்வி வர்ஷpனி ஜெயந்தன்

மூன்றாம் இடம்
செல்வி ஷ;ரியா சண்முகலிங்கம்
செல்வி தாருகா மோகனதாஸ்

மத்திய பிரிவு
இண்டாம் இடம்
செல்வி அஸ்வதி அருமைநாயகம்

மூன்றாம் இடம்
செல்வி ஜநிஷh றியா தனபரன்
செல்வி தர்மிகா மோகனதாஸ்

மேற்பிரிவு
இண்டாம் இடம்
செல்வி சுருதி சுதர்சன்
செல்வி ஆரியா பாஸ்கரன்

மூன்றாம் இடம்
செல்வி ஆதிகா செல்வராசா

அதிமேற்பிரிவு
இண்டாம் இடம்
செல்வி கௌசிகா மணிவேந்தன்

மூன்றாம் இடம்
செல்வி சுஜானி குமரேஸ்

21 வயதுக்கு மேற்பட்டோர்

இண்டாம் இடம்
செல்வி அஞ்சனா பகீதரன்

மூன்றாம் இடம்
செல்வி யனுசா இராசமோகன்

மூன்றாம் இடம்
செல்வி தரணிகா பத்மபாதன்

குழுநடனம்

கீழ்ப்பிரிவு
முதலாம் இடம் குழு டீ1
இண்டாம் இடம் குழு டீ3
மூன்றாம் இடம் குழு டீ2

மேற்பிரிவு
முதலாம் இடம் குழு னு2
இண்டாம் இடம் குழு னு1

அதிமேற்பிரிவு
முதலாம் இடம் குழு நு2

21 வயதுக்கு மேற்பட்டோர்
முதலாம் இடம் குழு கு1
இண்டாம் இடம் குழு கு4
மூன்றாம் இடம் குழு கு2