டென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் இணைந்து நடாத்திய கலைநிகழ்வு

79 0

16.03.2024 அன்று அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் மிகவும் சிறப்பாக Herning நகரில் நடைபெற்றது.
இக் கலைநிகழ்வானது வழமையான நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல், ஈகச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம் மற்றும் கலையக கீதம் போன்றவற்றுடன் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது.
இக் கலைநிழ்வில் கவிதைகள், நாடகங்கள், பரதநாட்டியங்கள், தாளலயம், எழுச்சி நடனங்கள், பாட்டுகள், உரை போன்ற பல நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன. இந் நிகழ்வுகள் அனைத்தையும் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் மிகமிக ஆர்வமாகவும் சிறப்பாகவும் வழங்கியிருந்தார்கள்.
இக் கலைநிகழ்வில் 2023 ஆம் ஆண்டு மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த ஓவியப் போட்டியில் பங்குபற்றி, வெற்றியீட்டிய (முதல் மூன்று இடங்களைப் பெற்ற) மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. அத்துடன் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் ஊடாக அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடத்தும் கலைப்பாடங்களுக்கான தேர்வில் தோற்றி, நிறைவு செய்த மாணவர்களுக்கு “கலைமணி” என்ற பட்டம் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கு நினைவுப்பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டதுடன், கலைநிகழ்வு இனிதே நிறைவடைந்தது.