“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை சேர்ந்த பெண் உட்பட மூவர் கைது

21 0

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “ குபுகட பச்சயன்” என்ற குற்றக் கும்பலை சேர்ந்த பெண் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கண்டி , தபோதாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 32, 38 வயதுடைய நபர்களும் கோனபல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவருமாவர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் தினார் , கார் , ஒரு இலட்சம் ரூபா பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.