விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர் மீட்பு!

100 0

இங்கிரிய பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில், பெண் ஒருவரும் அவருடன் சென்ற நபரொருவரும் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய நபரும் பனங்கலவத்த பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணுமாவர்.

தகாத உறவினால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.