50 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்கை விற்பனை செய்வதற்கு முயன்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரொன்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவராவார்.
விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் பேருவளை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் , பேருவளை பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

