வெடுக்குநாறிமலை சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழுவை அமையுங்கள் !

44 0

வெடுக்குநாறிமலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்குழுவினை அமைப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதற்கான எழுத்துமூலமான ஆவணத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் கையளித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட அவர், வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் சிவாரத்திரி தினத்தன்று வழிபாடுகளைச் செய்வதற்காகச் சென்றவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியமையானது மிகப்பெரும் தவறாகும்.

வெடுக்குநாறி மலையில் ஏற்கனவே வழிபாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதிகள் உள்ள நிலையில்ரூபவ் இரவில் வழிபடமுடியாது என்று பொலிஸார் தடைகளை ஏற்படுத்த முடியாது.

சிவராத்திரி என்பது சிவனுக்கு இரவில் பூசை வழிபாடுகளை முன்னெடுப்பதேயாகும். ஆகவே அந்த மரபுகளை மாற்றியமைப்பது முரணான விடயமாகும்.

அந்த வகையில்ரூபவ் வழிபாட்டுக்குச் சென்றவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்களை நடத்தியமையும்ரூபவ் அவர்களை வெளியேற்றிய முறைமையும்ரூபவ் பூசைகளை இடையில் நிறுத்தியமைiயும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயற்பாடாகும். இந்த விடயத்தினை ஏற்கனவே கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தேன்.

அத்துடன் விசாரணைக்குழுவொன்றை அமைத்துவிசாரணைகளை முன்னெடுக்குமாறும் கோரியிருந்தேன். இந்தநிலையில் தற்போது விசாரணைக்குழுவினை அமைப்பதற்கான எழுத்துமூலமான கோரிக்கையை ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளேன். விரைவில் அக்குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதியையும் வலியுறுத்தியுள்ளேன்.

அதேநேரம்ரூபவ் வெடுக்குநாறிமாலை வழிபாடுகளின்போது பொலிஸார் பக்கத்தில் மட்டுமல்லரூபவ் அதில் பங்கேற்றிருந்த சிறிய அரசியல் குழுவினரின் செயற்பாடுகளும் நிலைமைகளை மோசமாக்கியுள்ளது. ஆகவே இரண்டு தரப்பிலும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன என்றார்.