பலா மரப்பலகைகளை ஏற்றிச்சென்ற லொறி ; அரசியல்வாதி உட்பட மூவர் கைது!

85 0

கொக்மாதுவ அதிகவேக நெடுஞ்சாலையில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக பெறுமதியான பலா மரப்பலகைகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அரசியல்வாதி ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மரப்பலகைகள் சிரிமவுன் வத்த பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான காணியிலிருந்து வெட்டபட்டதாக சந்தேகிக்கும் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அரசுக்கு சொந்தமான காணிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சிலர் அங்குள்ள சொத்துக்களை சேதப்படுத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போது சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கொக்மாதுவ அதிகவேக நெடுஞ்சாலையில் மரப்பலகைகளை ஏற்றிச்செல்லும் லொறி ஒன்று பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.