ஹரக்கட்டாவின் கைத்தொலைபேசிகள், குடு சலிந்துவின் கடவுச்சீட்டுகள் மாயம்!

84 0

திட்டமிட்ட குற்றவாளி மற்றும் பாரிய போதைப்பொருள் வியாபாரி என கூறப்படும் நதுன் சிந்தக அல்லது ஹரக்கட்டாவின் இரண்டு கையடக்க தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்பிலிருந்தபோதே இவை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குடு சலிந்து என்பவரின் இரண்டு கடவுச்சீட்டுகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.