பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 9 மாணவர்கள் வைத்தியசாலையில்!

18 0

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நமுனுகுல கனவரெல்ல பிரதேச பாடசாலை ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட 3 மாணவிகளும் 6 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.