முதலாவது தேர்தல் சைகை மொழி அகராதி வெளியீடு

125 0

அனைவரையும் உள்ளடக்கிய வகையில் தேர்தல்களை நடத்துவதற்கான முதலாவது அடித்தளமாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம் ஆகியன இணைந்து முதலாவது தேர்தல் சைகை மொழி அகராதியை வெளியிட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவானது இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம்,தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியம் ஆகியவற்றுடனும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஸ்தாபனத்தி;ன் ஊடாக அமெரிக்க மக்களின் ஆதரவுடன் செவிப்புலன் வலுவற்ற மற்றும் செவிப்புலன் தன்மை குறைவான பிரஜைகளை அணுகக்கூடிய தேர்தல்களை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க ஒரு படியாக இலங்கையின் முதல் தேர்தல் சைகை மொழி அகராதியை வெளியிட்டுள்ளது.

தேர்தல் சைகை மொழி அகராதியை வெளியிடும் நிகழ்வு கொழும்பில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிடுகையில்,

இலங்கை தேர்தல் முறைமையையில் சைகை மொழி அகராதி வெளியிடல் பாரியதொரு வெற்றியாகும்.சைகை மொழி தொடர்பு பிறப்புடன் தொடர்புடையது.பேச்சுத்திறனுக்கு பின்னர் சைகை மொழி ஒரு தரப்பினருக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுமார் 04 இலட்சத்துக்கும் அதிகமான விசேட தேவையுடையவர்கள் உள்ளார்கள்.இவர்களில் செவிப்புலன் வலுவற்றோர் மற்றும் பார்வை குறைப்பாடு உள்ளவர்களின் நலனை கருத்திற் கொண்டு சைகை முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான கடமையாகும்.தேர்தலில் அனைவருக்கும் உரிமை மற்றும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கு மாத்திரம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் தேர்தல் முறைமை,வேட்பாளர்களின் பிரசாரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தெளிவூட்டுவது ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

விசேட தேவையுடையவர்கள் தேர்தல் முறைமை மற்றும் வாக்களிப்பு செயற்பாடுகளில் கலந்துக் கொள்வது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் சகல தலைவர்களும் விசேட கவனம் செலுத்தி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.ஆட்சியில் இருந்த நகல அரசாங்கங்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கின.

அனைத்து குடிமக்களும் தேர்தல் செயன்முறைக்கு சமமான அணுகலை ஊக்குவிப்பது அவசியமானது.சைகை மொழி அகராதியை தேர்தலுக்கு மாத்திரம் வரையறுக்காமல் சகல செயற்பாடுகளுடன் தொடர்புப்படு;த்துவது அத்தியாவசியமானது என்றார்.