அமெரிக்க தேர்தல் – குடியரசுக்கட்சியின் போதிய ஆதரவை பெற்று மீண்டும் பைடனுடன் மோதுகின்றார் டிரம்ப்

26 0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவசியமான பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

செவ்வாய்கிழமை நான்கு மாநிலங்களிலும் அமெரிக்க பிரதேசமொன்றிலும் வாக்கெடுப்புகள் இடம்பெற்றன வெளிநாடுகளில் வாழும் ஜனநாயக கட்சியினரும் வாக்களித்தனர்.

இதனை தொடர்ந்து 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரண்டுவேட்பாளர்களையே மீண்டும் அமெரிக்க மக்கள் எதிர்கொள்கின்றனர்.

இரண்டு கட்சிகளினதும் மாநாட்டில் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

டிரம்பின் ஆபத்து முன்னர் எப்போதையும் விட தற்போது அதிகமாக உள்ள நிலையில் தான் மீண்டும் போட்டியிடுவதற்கு வாக்காளர்கள் ஆதரவு வழங்கியுள்ளமை குறித்து பெருமிதம் அடைவதாக  ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சாதகமான பொருளாதார நிலையை சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப் அமெரிக்கா மீண்டும் பழைய வலிமையான நிலைக்கு திரும்பும் நிலையில் உள்ளது ஆனால் அமெரிக்கா அதன் ஜனநாயக எதிர்காலம் குறித்த சவால்களை எதிர்கொள்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.