பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. அதன்படி, இன்று புதன்கிழமை (13) மாலை 4.30 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு தொடரவுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஜனவரி 22 கூட்டத்தில் உறுதியளித்தபடி தங்களது சம்பளக் குறைப்பை அதிகாரிகள் சரி செய்யத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று செவ்வாய்க்கிழமை (12) நண்பகல் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
அதிகாரிகள் எமக்கு தீர்வை வழங்காவிட்டால், அடுத்த வாரம் முதல் காலவரையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ஜி.ரிச்மண்ட் தெரிவித்துள்ளார்.

