அகலவத்த பிரதேசத்தில் நாட்டு மருந்து விற்பனை நிலையமொன்றை நடத்தி சென்ற பெண் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணாவார்.
விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 2,600 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

