நிலவும் வெப்பம் காரணமாக பிள்ளைகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகலாம் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா கூறுகிறார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிலைமை அதிகரித்தால் அது வெப்ப அதிர்ச்சி, வெப்ப பக்கவாதம் அல்லது துரதிர்ஷ்டவசமாக மரணத்துக்கு வழிவகுக்கும் என்று நிபுணர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பிள்ளைகளை வெளிநடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாயின் காலை 11.00 மணிக்கு முன்னதாகவே அவர்களது நடவடிக்கையை முடிக்க வேண்டும்.
பாடசாலைகளில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதனால், பிள்ளைகள் அதிகமாக வெளியில் உள்ளனர். இவ்வாறான நிலையில் சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரிப்பதால் அவர்களுக்கு சோர்வு அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

