மேலதிக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல்!

106 0

கொழும்பில் உள்ள பிரதான தனியார் வைத்தியசாலை ஒன்றின் பணிப்பாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (12) மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

கொழும்பில் உள்ள பிரதான தனியார் வைத்தியசாலை ஒன்றின் பணிப்பாளர்களுக்கு அழைப்பாணை வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவுக்கு பிறப்பிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மாளிகாகந்த பிரதான நீதவான் இந்த அறிவித்தலை வழங்கினார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தம்மித கணேபொல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.