தெஹிவளையில் துப்பாக்கி ரவைகள் , போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

111 0

பாதாள உலக குழுவினர் என சந்தேகிக்கப்படும்  T56 துப்பாக்கிக்குரிய 16 தோட்டாக்கள்  மற்றும் ஜஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து  சந்தே நபர் வெளியே செல்லும்போது அவரை சோதனையிட்ட இவற்றைக் கைப்பற்றியதாக தெஹிவளை  பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து தோட்டாக்களுக்கு  மேலதிகமாக 3 கிலோ கஞ்சா 416 கிராம் ஜஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட  யுக்திய நடவடிக்கையின்போது  வீதி சோதனையில் ஈடுபட்ட பொலிஸார்  சந்தேக நபர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது இவர் கைது செய்யப்பட்டார்.