ஹரக்கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாளை 11ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியானதே இதற்குக் காரணம்.
ஒரு வருடத்துக்கும் மேலாக இவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் முதல் திகதி இவர்கள் இருவரும் மடகாஸ்கரில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

