இணையத்தளங்களுக்கு அடிமையான சிறுவர்களை ஒரே நாளில் மீட்பது சாத்தியமில்லை

112 0

கையடக்க தொலைப்பேசியின் ஊடாக இணையத்தளங்களுக்கு  அடிமையான சிறுவர்களை ஒரே நாளில்  மீட்பது சாத்தியமில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குழந்தைகளை வேறு பணிகளுக்கு வழிநடத்துவதன் மூலம் அவர்கள் கையடக்கத் தொலைப்பேசி மற்றும் இணையத்தளத்திற்குத் திரும்புவதைத் தடுக்க முடியும் என அதன் தலைவர்  தெரிவித்தார்.

கனடாவில் வீடொன்றில் வைத்து 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன், சிறுவர்கள் கையடக்கத் தொலைப்பேசி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.