ஜா – எல, தடுகம – பஸ்வத்தை பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் சனிக்கிழமை (9 ) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இருவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஜா- எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

