மாமனாரை கொலை செய்த மருமகன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்று வைத்தியசாலையில் அனுமதி!

119 0

தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடையவராவார்.

குடும்பத்  தகராறு எல்லை மீறியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர், தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள நிலையில் , பின்னர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.

இதனையடுத்து இவர்  சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.