வில்பத்து விடயம் – வர்த்தமானி அறிவித்தலை மீள பெற வலியுறுத்தி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

310 0

வில்பத்து சரணாலயத்துக்கு வட பகுதியில் உள்ள நான்கு காடுகளை பாதுகாப்பு வனங்களாக அறிவித்துள்ள வர்த்தமானி அறிவித்தலை மீள பெற வலியுறுத்தி வட மாகாண சபை, ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலானது கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கைச்சாத்திடப்பட்டது.

இதற்கமைய, வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கிலுள்ள மாவில்லு, வெப்பல், கரடிக்குளி மற்றும் மரிச்சுக்கட்டி முதலான நான்கு காடுகளையும், பாதுகாப்பு வனங்களாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வர்த்தமாணி அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வில்பத்து, குறித்த பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அந்த வர்த்தமாணி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.