தேசபந்து தென்னகோனின் நியமனத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!

98 0

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோனை முறையற்ற வகையில்  பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்தை  சட்டவிரோதமானது எனக் கூறி தீர்ப்பளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பேராசிரியர் சாவித்திரி குணசேகர மற்றும் நிரோஷன் பாதுக்க ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் நேற்று (07) அடிப்படை உரிமை மனுக்களைத்  தாக்கல் செய்துள்ளனர்.

சபாநாயகர், சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை முற்றிலும் சட்டத்துக்கு முரணானது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.