அம்பாறை – சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வர்த்தக பீடத்தை சேர்ந்த 28 மாணவர்களுக்கு கற்றல் தடை விதிக்கப்பட்டுள்ளது.பல்கலைகழக உபவேந்த எம்.எம்.எம் நஜிம் இதனை தெரிவித்துள்ளார்.
பகிடி வதையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களுக்கு பல்கலைகழக உணவகத்தில் வைத்து அநாகரிகமான முறையில் பகிடி வதை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழகத்தின் பாதுகாப்பு பிரிவினரால் சந்தேகத்துக்குரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக உப வேந்தர் எம்.எம்.எம் நஜிம் தெரிவித்துள்ளார்

