“ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு” – யேர்மனி 2024.

363 0

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் யேர்மனி தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும் மேயர் பாரதி கலைக்கூடமும் இணைந்து வழங்கிய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு கடந்த 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை வூப்பெற்றால் நகரிலுள்ள வூப்பர் கலையரங்கில் சிறப்பாக நடாத்தப்பட்டது.

இவ் ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வில் மண் காக்கும் புனிதப்போரிலே விதைகளாக வீழ்ந்துவிட்ட மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவுகூர்ந்து திரு. துரைச்சாமி கோணேஸ்வரன் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழரின் மரபிற்கமைய மங்கலவிளக்கினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மன் கிளைத் துணைப்பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் ஜெயசங்கர், நடுவர்களில் ஒருவரான பாரீஸ் கலாலயம் அதிபர் ஸ்தாபகர் “பரதசூடாமணி” திருமதி: கௌசலா ஆனந்தராஜா, நடுவர்களில் ஒருவரான ⁠”பரதசூடாமணி” திருமதி: அனுஷா மணிவண்ணன், நடுவர்களில் ஒருவரான ”பரத கலா வித்தகர்” திருமதி. ஜெயந்தி சுகிர்தன், யேர்மன் தமிழர் கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளர் திரு. சுந்தரலிங்கம் கோபிநாத், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலம்1 இன் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலம் 2 இன் பொறுப்பாளர் திரு. சதாசிவம் சிறிகந்தவேல் மற்றும் யேர்மன் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் மத்தியமாநிலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்வி. சுபாங்கி தங்கத்துரை ஆகியோர் ஏற்றிவைத்தனர். அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு தேர்விற்கான அறிமுகத்துடன் தேர்வு தொடங்கிவைக்கப்பட்டது.

இவ் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வில் ஆடற்கலாலய ஆசிரியர் திருமதி. றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகளான செல்வி. அபிரா தயாபரன், செல்வி.சுவேதா ஜெயக்குமார், திருமதி: விதுஷா நவீன் ஆகியோரும் நிருத்திய நாட்டியாலய ஆசிரியர் திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவி திருமதி. ராகவி செல்வராசா அவர்களும் ஆடற்கலாலய ஆசிரியர் செல்வன். நிமலன் சத்தியகுமார் அவர்களின் மாணவிகளான செல்விகள். சபிதா தவநேசன், ரோசிகா ரவிக்குமார், ராசிகா ரவிக்குமார், சாகித்யா விஜயகுமாரன் ஆகியோரும் பங்குகொண்டு தமது ஆற்றுகைத்திறனை வெளிப்படுத்தினர். நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வானது நிகழ்ச்சிநிரல்களின் ஒழுங்கிற்கமைவாக திருமதி. கலையரசி லிங்கேஸ்வரன் அவர்களால் சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டது.

இத்தேர்விற்காக தேர்வாளர்களின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களென அனைவரும் வருகைதந்து சிறப்பித்தனர்.