இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் அக்கறையின்மை காரணமாகவே சாந்தன் என்ற நல்ல மனிதரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (05.03.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் பின்னர் 2022ஆம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட ஏழு பேரில் 3 பேர் இந்திய குடியுரிமை கொண்டவர்கள். இந்திய குடியுரிமை கொண்டவர்களாக இருந்தமையால் அவர்கள் இயல்பு வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.
எனினும், அரசாங்கத்தின் அசமந்த போக்கு காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் இராஜதந்திர நகர்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் சாந்தன் உயிருடன் தாயகம் திரும்ப முடியாது போனது என சுட்டிக்காட்டியுள்ளார்.

