பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் ஆர்ப்பாட்டத்தை தடுக்கக் கோரும் பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு!

136 0

மக்கள் விடுதலை முன்னணியின் புதிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த பல பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் கொழும்பு பௌத்தலோக மாவத்தை உள்ளிட்ட புறநகர் வீதிகளில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு கறுவாத்தோட்ட  பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (05) நிராகரித்தார்.

அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவின் மூலம் கருத்துரிமை சுதந்திரம்  மற்றும் சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த அடிப்படை மனித உரிமைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 ஆவது பிரிவின் மூலம் அவற்றை  மீற முடியாது என்றும் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் அலோக சேனாநாயக்க இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்த நிலையில் பொலிஸ் சார்ஜன்ட் சமன் ராஜபக்க்ஷ நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.