க.பொ.த சாதாரணதரப்பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரணதரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அனைவரும் சித்தி எய்தவேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், க.பொ.த உயர்தரத்தில் அம்மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய மற்றும் திறனைக் கொண்டிருக்கும் பாடவிதானங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி இவ்வருடம் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 3,370,000 மாணவர்களில் 50,000 மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றில் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

