போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக நபர்களிடமிருந்து தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸிலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க நாளை புதன்கிழமை (06) பணிக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாளை (06) அவர் பணிக்கு சமூகமளிக்காவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இவர் வெளிநாடு சென்றிருந்தாலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

