சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் !

58 0

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் திடீரென உயிரிழந்திருந்தார்.

சாந்தன் உயிரோடு இலங்கைக்கு வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. மக்கள் பல்வேறு இடங்களிலும் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் தூயிலுமில்லத்திற்கு எடுத்துவரப்பட்ட போது வீதிகளில் திரண்டு மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

இறுதியாக எள்ளங்குளம் மாவீர்ர் துயிலுமில்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் விபூதி போடப்பட்டு சாந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.