27 வருடங்களின் பின்னர் ஊறணி பிரதேசம் விடுவிக்கப்பட்டது

338 0
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி பிரதேசத்தின் 28.8 ஏக்கர் காணி
படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வலிகாமம் வடக்கு – ஊறணி பகுதி   மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இன்றைய தினம்  விடுவிக்கப்பட்டது.
கடந்த மாதம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் ஊறணி மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய பகுதிகளில் சுமார் 28.8 ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் இறுதிக்குள் மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளதாக கடந்த மாதம் செய்தி வெளியாகியிருந்மை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஊறணி பகுதியில் 28.8 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது இன்றைய தினம் ஊறணியில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் படைகளின் தளபதி தர்சன கெட்டியாராச்சியினால் யாழ் அரச அதிபரிடம் காணி விடுவிப்பு தொடர்பான பத்திரம் கையளிக்கப்பட்டது…இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலர். காணிக்கு பொறுப்பான அரச அதிபர் மற்றும் இராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.