நெடுந்தீவு சிறுமியை கற்பழித்து கொலை செய்தவருக்கு மரணதண்டணை

270 0
நெடுந்தீவு சிறுமியைக் கற்பழித்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை வித்தித்தது யாழ்.மேல் நீதிமன்றம்.
யாழ்.நெடுந்தீவில்  ஜேசுதாசன் லக்சாயினி என்ற 13 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திக் கொலை செய்த நபருக்கு மரணதண்டனை  விதித்துத் தீர்பளித்தார் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்.
அத்தோடு, பாலியல் வன்புணர்வுக்குக் குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் கட்டத் தவறினால் 1 வருட சிறைத் தண்டனையும், சிறுமியின் பெற்றோருக்கு 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈடுடாக வழங்குமாறும் தவறினால் 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது தீர்ப்பளித்தார்.
கடந்த 2012 ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாசன் லக்சாயினி என்ற 13 வயதுச் சிறுமி வீட்டிலிருந்து  சந்தைக்கு மீன் வாங்கச் செல்லும் பொது கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வண்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகச் கட்சியின் உறுப்பினரான கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு வழக்கு  விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது  கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனையும், பாலியல் வன்புணர்வுக்குற்றத்துக்கு 20 வருட கடூழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.