அரசியல்வாதியின் மகன் பெண் ஒருவர் மீது தாக்குதல்

52 0

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம். முஸம்மிலின் மகனைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்வர்களில் ஒருவரான மொஹமட் இஷாம் ஜமால்டீனின் தாக்குதலினால் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஹெவ்லொக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து பெண்ணை தாக்கியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.