வரி அறவீட்டு முறையை மாற்றியமைத்து வருமானத்தை அதிகரிக்க வேண்டும்

292 0

வரிகளை அறவிட தற்போதுள்ள முறைகளை மிகவும் வினைத்திறன் மற்றும் உரிய முறையில் மாற்றியமைத்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனியார் துறை மற்றும் முதலீட்டு துறைகள் மூலம் அரச வருமானத்திற்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் கிடைப்பதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வரி அறவீடுகளில் காணப்படும் பலவீனம் மற்றும் சிக்கல்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய வருமான வரி ஆணையாளர்கள் சங்கத்தின் 16வது வருடாந்த மாநாட்டில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, பொதுமக்களுக்கு மிகவும் உயர்ந்த நிலைமை ஏற்படுத்திக்கொடுப்பது அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.