ஈருருளிப்பயணம் நேற்றைதினம் (28.02.2024) மாலை சுவிஸ் நாட்டின் எல்லை பாசல் மாநிலத்தை வந்தடைந்தது.

73 0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 15.02.2024 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் நேற்றைதினம் (28.02.2024) மாலை சுவிஸ் நாட்டின் எல்லை பாசல் மாநிலத்தை வந்தடைந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் (29.02.2024) சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தின் எல்லையில் இருந்து ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் முறையே பாசல்லாண்ட் ( Basel-Landschaft), சொலத்தூண் ( Solothurn ) பேர்ண் (Bern) பிறிபேர்க் (Frieburg) வோ (Vaud) மாநிலங்கள் ஊடாக பயணித்து
நீதி கோரிய பயணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2024) பின்நேரம் ஜெனிவா மாநிலத்தின் அமைந்துள்ள ஐ.நா முன்றலை சென்றடைய உள்ளது. அனைவரும் ஈருருளி பயணத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை; எமது வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நாம் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் தளராத உறுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.

தமிழீழ தேசிய தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.