தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, டென்மார்க்

78 0

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்ட
சுற்றுப்போட்டி 2024, டென்மார்க்

இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்திக்கொண்டு அகவணக்கத்துடன்
ஆரம்பிக்கப்பட்டது.

டென்மார்க் வாழ் தமிழர்களிடையேயான கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக தமிழர் வினையாட்டுத் துறையினரால் 12 ஆவது தடவையாக 24.02.2024 சனிக்கிழமை அன்று இச் சுற்றுப்போட்டி சிறப்பாக Vejle நகரில் நடைபெற்றது.

இதில் 21 அணிகள் பங்கேற்று சிறப்பித்தனர், இவ் அணிகளில் நால்வரடங்கிய பிரிவு, 40 வயதிற்கு மேற்ப்பட்டோர் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடாத்ப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டதோடு, சிறந்த வினையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு கிண்ணங்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

வெற்றி பெற்றோர் விபரம்:

40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு:

1ஆம் இடம்.: DTSC
2ஆம் இடம்: ஓகூஸ் எக்ஸ்பிரஸ்
3ஆம் இடம்: Horsens

40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரனாக அரவிதந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

நால்வரடங்கிய பிரிவு.

1ஆம் இடம்: ஓகூஸ் எக்ஸ்பிரஸ்
2 ஆம் இடம்.: Vejle A1
3.ஆம் இடம்: Hillerød

நால்வரடங்கிய பிரிவில் சிறந்த விளையாட்டு வீரனாக அஸ்வின் கோணேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.