யுக்திய நடவடிக்கையில் மேலும் 730 பேர் கைது!

47 0

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 154 கிராம் 267 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் , 81 கிராம் 485 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் , 209 கிராம் நிறையுடைய மதனமோதகம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 526 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் 204 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 526 சந்தேக நபர்களில் 4 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.