மஹிந்த குழுவுடன் ஸ்ரீ ல.சு.க.யின் இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்கிறது-டபிள்யு. டி.ஜே. செனவிரத்ன

230 0

கூட்டு எதிர்க் கட்சியுடன் தொடர்ந்தும் இரகசியப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமாகிய டபிள்யு. டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சிக்கும் தமக்கும் இடையில் கொள்கை ரீதியில் பாரிய இடைவெளி இல்லை. இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ளமை, உள்வீட்டுப் பிரச்சினை மாத்திரமே எனவும் அமைச்சர்  கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியை தாம் வெளியார் எனப் பார்ப்பதில்லையெனவும், இரு தரப்பினரிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்வதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.