26/02/2024 காலை ஏர்ஸ்தேன் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்

150 0

இன்று பிரான்சில் பென்பேட் , செலாட்சாட்,கொல்மார் மாநகர உதவி முதல்வர்களையும், செயளாலர்களையும் சந்தித்து தனது இலக்கு நோக்கி பயணிக்கின்றது. நேற்ற தினம் பல அரசியல் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது. அறவழிப் போராட்டத்தின் இலக்கு பற்றி மாநகர உதவி முதல்வருடனான கலந்துரையாடல் நடைபெற்றது, இதில் சிறிலங்கா சிங்களபெளத்த இனவாத அரசால் திட்டமிட்டு நடந்தப் பட்ட தமிழினப் படுகொலைகள் பற்றியும். தற்போது தமிழீழத்தில் திட்டமிட்டு நடத்தப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பு பற்றியும் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கப் பட்டது. தமிழர்களுடைய நியாயமான கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளிக்கப்பட்டது,இதனை தொடர்ந்து மாநகர துணை முதல்வர்களுடனும் சந்திப்புகளை மேற்கொண்டு பிரான்சு அரசு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டுமென கேட்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையிலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் சம நேரத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பிரான்சு நாடும் மிக முக்கியமானது. எனவே பல்லின வாழ் மக்களின் சக்தியோடும் ஊடகங்களின் முக்கியத்துவத்தோடும் பிரான்சு நாட்டு மக்கள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு பிரான்சு நாட்டினைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
அறவழி ஈருருளிப்பயணத்தின் மூலம் வலுவான அரசியற் செய்தியினை நேற்று 25/02/2024 சில்றிக்காம் மாநகரசபையின் துணை முதல்வர்கள், மேற்சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனான சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பன்னெடுந்தூரம் வலி சுமந்து வந்த நியாயமான கோரிக்கைகளினை தாம் வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் பிரான்சு, அரச அதிபரிடமும் சமர்ப்பிப்பதாகவும் உறுதிமொழி தந்து ஊக்குவித்தனர். நகரசபை முதல்வர்கள் தம் ஆதரவினைத் தெரிவித்தனர்.

எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றனர். எதிர் வரும் திங்கட் கிழமை 04/03/2024 அன்று 14மணிக்கு ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தமிழீழ மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்கும் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கின்றது. எனவே அனைத்து மக்களும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள்.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்”
– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.