அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்படும் போது, அதனுடன் தொடர்புடைய அமைச்சர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தராமல் இருக்கின்றமை சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சுக்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பும் போது அதனுடன் தொடர்புடைய அமைச்சரரோ அல்லது பிரதி அமைச்சர்களோ வருகை தருவதில்லை என நாடாளுமன்ற சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், கேள்விகள் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போதும் அமைச்சர்கள் வருகை தராமல் இருப்பதால் நாடாளுமன்றில் குழப்ப நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பில் நாடாளுமன்ற வலைத்தளத்தில் தகவல் வெளியிட வேண்டும் என கிரியெல்ல கூறினார்.இந்த செயல்முறை எதிர்வரும் மே மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது என இதற்கு பதிலளித்த சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

