போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இலங்கையர்கள் சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.திருச்சிராப்பள்ளியில் இருந்து பிரவேசித்த குறித்த இலங்கையர்கள், டுபாய் ஊடாக அயர்லாந்து செல்ல முயற்சித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

