இஸ்ரோவின் உதவியுடன் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணி

306 0

201607241540170206_ISRO-help-seeked-to-locate-missing-IAF-AN-32-aircraft-near_SECVPFசென்னையில் இருந்து நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு அந்தமான் சென்றபோது மாயமான ஏ.என்-32 ரக ராணுவ விமானத்தில் பயணம் செய்த தமிழக வீரர் உள்ளிட்ட 29 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விமானப்படை விமானம் மாயமானது தொடர்பாக தாம்பரம் அருகேயுள்ள சேலையூர் போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏ.என்-32 விமானம் குறித்தும், விமானத்தில் சென்றவர்கள் தொடர்பாகவும் தாம்பரம் விமானப்படை தளத்தில் உள்ள அதிகாரிகளிடம் சேலையூர் காவல் ஆய்வாளர் விசாரித்து வருகிறார்.

இதற்கிடையே, இன்று வானம் மேகமூட்டமின்றி தெளிவாக இருப்பதால் விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாயமான விமானப்படை விமானத்தை கண்டுபிடிக்க இஸ்ரோவிடம் உதவி கோரப்பட்டு உள்ளது.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கப்பல் படை கிழக்கு பிராந்திய தலைவர் பிஷ்ட், மாயமான விமானப்படை விமானத்தை கண்டுபிடிக்க இஸ்ரோவிடம் உதவி கோரப்பட்டு உள்ளது. இஸ்ரோ தரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் விமானத்தை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். விமானத்தை தேடும் பணியில் அதிகமான கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. கப்பல்கள், விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கடலோர காவல்படை கப்பல்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது,” என்று கூறினார்.