யாழ் போதனா வைத்தியசாலை அலுவலருடன் முரண்பட்டதால் ஒருவர் கைது

140 0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரினால் புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டார்.

காரைநகரிலிருந்து அம்புலன்ஸில் கொண்டுவரும்போது உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை விரைவாகத் தருமாறு

வைத்தியசாலையின் மேற்பார்வையாளர் அலுவலகத்திற்குச் சென்று தகாத வார்த்தைகளைப் பேசிய குறித்த நபர், அலுவலகர்களுடன் முரண்பட்டு அங்கிருந்த பெயர் பலகையையும் சேதப்படுத்திய நிலையில் வைத்தியசாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதன்போது குறித்த நபர் மதுபோதையிலிருந்தாக தெரிவிக்கப்படும் நிலையில் சந்தேக நபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.