தனது முன்னாள் காதலியுடன் தொடர்பை பேணியதால் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் மற்றுமொரு இளைஞனினை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளாகிய இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்கிய சந்தேக நபர் பெண் ஒருவர் மீது காதல் வைத்துள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் அந்த பெண் அந்த உறவை நிறுத்திவிட்டுத் தாக்கப்பட்ட இளைஞனுடன் காதலில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

