மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு சட்டவிரோதமானது

149 0

நாட்டை வங்குராேத்து அடையச் செய்த மத்திய வங்கி அதிகாரிகளின் மாதச் சம்பளம் நூற்றுக்கு 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் இவ்வாறு மேற்கொண்டிருப்பது சட்டவிராேத செயலாகும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கை பொறுப்பு பற்றுச்சீட்டுகள்(திருத்தச்) சட்டமூலம் உள்ளிட்ட 9 சட்டமூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாடு வங்குராேத்து நிலைக்கு செல்லும்போது இது தொடர்பாக மத்திய வங்கி ஆளுநரராே நிதி அமைச்சின் செயலாளராே நாட்டுக்கோ பாராளுமன்றத்துக்கோ வெளிப்படுத்தவில்லை.

ஆனால் நாடு வங்குராேத்து அடைவதை வெளிப்படுத்தாமல்  மறைத்த மத்திய வங்கி அதிகாரிகளுக்கு நூற்றுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கி இருக்கிறது. எவ்வாறு இவ்வாறு சம்பளம் அதிகரிக்க முடியும்.

மக்களின் இடுப்புப்பட்டியை இறுக்கிக்கொள்ளுமாறும் காரியாலயங்களில் ஆளணியை குறைக்குமாறும் முழு நாட்டுக்கும் ஆலாேசனை வழங்கியது இவர்களாகும்.

ஆனால் மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் சம்பளம் 7இலட்சத்தி 12ஆயிரம் வரை அதிகரித்திருக்கிறது.இது முறையா என கேட்கிறேன்.

அதேபோன்று அலுவலக உதவியாளர்களின் சம்பளத்தை  75ஆயிரம் ரூபாவால் அதிககரித்துக்கொண்டிருக்கிறது. அவ்வாறு பலரது பெயர் பட்டியல் இருக்கிறது. இவ்வாறு சம்பளம் அதிகரித்துக்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் இல்லை.அவர்கள் கண்களை மறைத்து செயற்பட்டுள்ளனர்.

அத்துடன் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை கணக்கிட்டுக்கொள்ள அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இருக்கிறது.

ஆனால் அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டும். என்றாலும் தறபோது அதிகரிக்கப்பட்டிருக்கும் சம்பள அதிகரிப்புக்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை.

அதனால் இந்த சம்பள அதிகரிப்பு சட்டவிராேதமாகும். இதனை தடுக்காவிட்டால், எதிர்காலத்தில் நாங்கள் அந்த பணத்தை அவர்களிடமிருந்து மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் நாடு வங்குராேத்து அடைவதை மறைத்த இவர்கள் இந்த பொறுப்பில் இருந்து தப்ப முடியாது. அவ்வாறு இருக்கும்போது எவ்வாறு இவர்களுக்கு சம்பளம் அதிகரிக்க முடியும்.

அவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்று அரச சுகாதார துறையினர் கோரும் 35ஆயிரம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அரசாங்கம் தெரிவிக்கிறது.

மேலும் மத்திய வங்கி அதிகாரிகள் தங்களுககு தேவையான முறையில் சம்பளத்தை அதிகரித்துககொண்டிருப்பதுபோல், அவர்களுக்கு தேவையான முறையில் அவர்களின் ஓய்வூதியத்தையும்  அமைத்துக்கொள்ள முடியும்.

அப்படியானால், நாடு வங்குராேத்து அடைந்தமைக்கு பொறுப்பு கூறவேண்டும் என உயர் நிதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நபர்களில் மத்திய வஙகியின் முன்னாள் ஆளுநர்களான டபிள்யூ. டி, லக்ஷ்மன், நிவார்ட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிகல ஆகியோருக்கும் இந்த நன்மை வழங்கப்போகிறதா என கேட்கிறோம் என்றார்.