புதுக்குடியிருப்பில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் மூவர் கைது

143 0

விசுவமடுவில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த  ஒருவரின்  மோட்டார் சைக்கிள்  திருடப்பட்டுள்ளதாக  சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு  கிடைத்துள்ளது.

குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18)  மாட்டுவண்டி சவாரி இடம்பெற்றுள்ள போது நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்ததனர்.

இதன்போதே  வட்டக்கச்சியில் இருந்து குறித்த நிகழ்வை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்  புதுக்குடியிருப்பு பொலிஸில் நேற்று திங்கட்கிழமை (19) முறைப்பாடு  செய்துள்ளார்.

வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் 38, 27 ,25 வயதுடையவர்கள் என்பதுடன் குறித்த சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.