மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது-தமிழிசை

331 0

201607241532199969_Makes-blackout-the-federal-government-plans-Tamilisai_SECVPFமத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.மதுரை பீ.பி குளத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் சேவை மையத்தில் இலவச சட்ட ஆலோசனை பிரிவை கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மதுரையில் கடந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே இருந்தது. ஆனால்சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்ட காரணத்தால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வருகிற பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.

தமிழக மக்கள் நலனில் மோடி அக்கறையோடு செயல்பட்டு வருவதால் தான் மத்திய அரசின் பல திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் முதல் முறையாக ராமேசுவரம்– மானாமதுரை ரெயில்களில் பயோ கழிப்பறை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

குஜராத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பாரதீய ஜனதா அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குறைகூறி வருகிறார்கள். இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது ராகுல்காந்தி தூங்கி வழிகிறார். மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றவர்களில் 6 பேர் தலித்துக்கள் ஆவார்கள்.

மத்திய அரசின் கல்வி திட்டத்தை கருணாநிதி குறைகூறி வருகிறார். அந்த கல்வியில் மத சாயம் பூசப்படுவதாக கூறியிருக்கிறார். அதில் மதம் இருக்காது. அறிவுப்பூர்வமான கல்வி இருக்கும்.

மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படமாட்டாது. மத்திய அரசுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு சரியாக இல்லை. இதனால் பல திட்டங்கள் உரிய நேரத்தில் செயல்படுத்தமுடியாத நிலை உள்ளது.

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு இருட்ட டிப்பு செய்து வருகிறது. இது சரியல்ல. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் உலகத்தரத்தில் அமையவேண்டும் என்பது பிரதமர் மோடியின் நோக்கம். நினைவு நாளில் ராமேசுவரத்துக்கு பிரதமர் வருவது உறுதி செய்யப் படவில்லை.

மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கையாநாயுடு, மனோகர் பரிக்கர் ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் –ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல்துறை மற்றும் அரசின் பல துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு கூட்டணி அமைக்க அவசியம் இருக்காது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். பாரதீய ஜனதா தனியாக நின்றாலும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.