மாதம்பே பிரதேசத்தில் 26 வயதான இளைஞரின் சடலம் மீட்பு!

157 0

மாதம்பை தினிப்பிட்டிய பிரதேசத்தில் சடலம் ஒன்று நேற்று  சனிக்கிழமை (17) மீட்கப்பட்டதாக  மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் மாதமபே  ஸ்ரீசுதர்ஷனராம விகாரையில் தற்காலிகமாக வசித்து வந்த 26 வயதான இளைஞர் ஆவார்.

இவர் 5 தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காகச்  சிலாபம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மரணத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர் .