நுவரெலியாவில் பாடசாலை காணியை தனியார் சொந்தமாக்குவதற்கு எதிர்ப்பு

151 0

நுவரெலியா காமினி தேசிய பாடசாலையின் முன்னால் காணப்படுகின்ற நிலத்தை தனியார் சொந்தமாக்குவதற்கு எதிர்ப்பினை தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (16) காலை 11:30 மணி முதல் பாடசாலையின் முன்னால் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலைக்கு முன்னால் காணப்படுகின்ற நிலங்களை மீட்டு பாடசாலைக்கு  தருமாறு கோரி கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

இவ் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கையில் அனேகமான பொதுமக்கள், பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பிற பாடசாலைகளை சேர்ந்த மாணவ மாணவிகள் என பல்வேறுபட்டதரப்பினர் இவ்கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டனர்.